பட சர்ச்சையால் வெளிநாடு சென்ற நடிகர் சூர்யா..!
ஜெய் பீம் படம் சர்ச்சை தொடர் கதையாகி வருவதால் நடிகர் சூர்யா குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமேசான் தளத்தில் வெளியாகி உள்ள சூர்யாவின் ஜெய்பீம் படத்தை சுற்றி நடக்கும் சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் வனியர்சங்கத்திற்கு படக்குழு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என வலியுறுத்தியதோடு ஜெய்பீம் படத்தை எந்த ஒரு ஒன்றிய மாநில அரசுகளின் விருதுகளுக்கும் பரிந்துரைக்க கூடாது என கூறப்பட்டது.
இவ்வாறு தொடர்ந்து சர்ச்சை வருவதால் நடிகர் சூர்யா துபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் குடும்பத்தினருடன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






