பேருந்து ஓட்டுநர் வழிவிடாததால் தாக்குதல் நடத்திய கார் ஓட்டுநர்..!
மதுரையில் அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை சொகுசு கார் ஒன்று முயன்றுள்ளது.
குறுகலான பாதை இருந்ததால் பேருந்து ஓட்டுனர் வழி விடாத நிலையில் கார் ஓட்டுநர் இறங்கி பேருந்து ஓட்டுநர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் பேருந்து ஓட்டுனரை தாக்கிவிட்டு தப்பித்துள்ளார்.
இது தொடர்பான காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். சிவகங்கையை சேர்ந்த கார் ஓட்டுநர் சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.






