--- --:--:-- --

அண்ணாத்த படத்தை ஆபாசமாக விமர்சிக்கும் யூடியூப் சேனல்..!

10

டிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தை ஆபாசமாக விமர்சித்து யூடியூப் சேனல் ஒன்று வீடியோ வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா விமர்சனம் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை யூடியூப் சேனல் தொடர்ந்து வெளியிடுவதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் மிகவும் ஆபாசமாக படத்தை விமர்சித்து உள்ளதாக விமர்சனங்கள் எழுந்து இருக்கின்றனர்.

 

இந்த வீடியோவுக்கு சினிமாக்காரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 

விமர்சனம் என்ற பெயரில் மிகவும் கீழ்த்தரமான கருத்துகளை இந்த யூடியூப் சேனல் முன்வைத்து இருப்பதாகவும் சமூக வலைதளங்களுக்கு முறையான கட்டுப்பாடுகள் இல்லாததால் இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடுவதாகவும் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon