--- --:--:-- --

நாளை டெல்டா மாவட்டங்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் பயணம்..!

1

ழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை பார்வையிட உள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

 

இதன்படி நாளை காலை மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், மதியம் நாகை மாவட்டத்திலும் உதவிகளை வழங்க உள்ளனர். மாலையில் திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஓபிஎஸ், இபிஎஸ் பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon