--- --:--:-- --

பாட்டியின் துக்க விழாவிற்கு வந்த இளைஞர் காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்டார்..!

5

காஞ்சிபுரம் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞரின் சடலம் பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மீட்கப்பட்டது. உத்தரமேரூர் அடுத்த கட்டியாம்பந்தல் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற சந்தோஷ் என்ற இளைஞர் காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

 

அவரை தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக தேடி வந்தனர். பல மணி நேரத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டனர். சடலத்தை மீட்டு வந்த உறவினர்கள் அந்த பகுதி மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

 

உயிரிழந்த பாட்டியின் துக்க நிகழ்விற்கு வந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டது உறவினர்களை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon