--- --:--:-- --

அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு..!

3

குமரிக்கடல் மற்றும் இலங்கையில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று கனமழையும், மதுரை, தென்காசி, இராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்கிறது.

 

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon