--- --:--:-- --

ஊசி இல்லாத கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்..!

4

சைடஸ் கேடிலா நிறுவனம் தடுப்பூசியின் முதல் டோஸ் விலையாக 358 ரூபாயாக குறைக்க ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த சைடஸ் கேடிலா நிறுவனத்தின் டி‌எச்‌ஏ அடிப்படையிலான ஊசி இல்லாத தடுப்பூசி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.

 

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு போடக்கூடியதாகும். 3 டோஸ் தடுப்பு மருந்தை சைடஸ் கேடிலா நிறுவனம் 1,900 ரூபாய் விலை நிர்ணயித்ததாக தகவல் வெளியானது. இந்த விலையை குறைக்க மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

 

இந்த தடுப்பூசி ஊசி இல்லா தடுப்பூசி என்பதால் ஒவ்வொரு டோஸ் செலுத்தவும் 93 ரூபாய் மதிப்பிலான கருவி ஒன்று தேவையாகும். இதனால் முழு தடுப்பூசி 265 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் தடுப்பூசியை செலுத்தவும், கருவி உள்ளடக்கி 358 ரூபாயாக உயர்ந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon