--- --:--:-- --

மனைவி மீதான கோபத்தில் 7 வயது மகளை கத்தியால் குத்தி கொன்ற தந்தை..!

2

சென்னை வில்லிவாக்கத்தில் மனைவி மீதான கோபத்தில் 7 வயது மகளை கத்தியால் குத்திக் கொன்ற கொடூர மனம் படைத்த தந்தை கைது செய்யப்பட்டார்.

 

ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி லாவண்யா கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்று தனது மகன் மகளுடன் தனியே வசித்து வந்தார்.

 

லாவண்யா சனிக்கிழமை இரவு பணிக்கு சென்ற நேரம் பார்த்து அவர் வீட்டிற்குச் சென்ற ராதாகிருஷ்ணன் ஏழு வயதான மகள் மகாலட்சுமி வைத்திருந்த செல்போனை வாங்கி மனைவியிடம் கோபமாக சிறிதுநேரம் பேசியுள்ளார்.

 

பின்னர் அதே கோபத்துடன் பெற்ற மகளை கத்தியால் பல இடங்களில் குத்திக் கொன்று விட்டு தப்பி ஓடியுள்ளார். தலைமறைவாக இருந்த ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon