3 மாத ஆண் குழந்தையை அடித்து கொலை செய்த பாட்டி.!

கோவையில் 3 மாத ஆண் குழந்தையை அடித்து கொலை செய்த பாட்டியை போலீசார் தேடி வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையத்தில் சேர்ந்தவர் பாஸ்கரன் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக உள்ளார்.

 

இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பாக ஆண் பெண் என இரு குழந்தைகள் பிறந்தன. இதற்கிடையே குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக ஐஸ்வர்யாவின் தாய் சாந்தி வந்துள்ளார்.

 

ஐஸ்வர்யாவும் அவரது கணவரும் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது ஒரு குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததாகவும், மற்றொரு குழந்தை காயங்களுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சென்ற பொழுது ஆண் குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. தேசிய பாடசாலையில் பாட்டி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் குழந்தையை கொன்றதும் தெரியவந்தது.சிசிடிவி காட்சிகளை கொண்ட தலைமறைவான சாந்தியை போலீஸார் தேடி வருகின்றனர்.