--- --:--:-- --

திருமணமாகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை..!

3

கன்னியாகுமரியில் திருமணமாகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.

 

30 வயதான இவர் பிளஸ் டூ வரை படித்துவிட்டு டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரின் சகோதரருக்கு திருமணம் ஆன நிலையில் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற விரக்தியில் இருந்துள்ளார்.

 

மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் சம்பவத்தன்று தன் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுரேஷின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon