--- --:--:-- --

நாட்டை வழி நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது..!

2

அரசு குடும்பம், ஜாதி பின்னணி என எதுவுமே இல்லாமல் நாட்டை வழி நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

 

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் விடுதிக்கு காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய பிரதமர் மோடி நான் பொது மக்களில் ஒருவனாக இருந்தேன் தனக்கு அரசியல் அல்லது அரசு குடும்பப் பின்னணியோ, சாதி ரீதியிலான பின்னணியோ இல்லை.

 

ஆனால் மக்களின் ஆசிதான் 2001 ஆம் ஆண்டு குஜராத்துக்கு சேவையைப் பெறுவதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியது என தெரிவித்தார்.

 

இந்த அரசியல் தொடர்புதான் 20 ஆண்டுகளை கடந்தும் நாட்டு மக்களுக்கு சேவை செய்து வருகின்றோம் எனவும் கூறிய பிரதமர் மோடி முதலில் குஜராத்தில் சேவையாற்றிய நான் இப்பொழுது நாடு முழுவதற்கும் சேவை செய்கின்றேன் என தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon