வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, புதுக்கோட்டை கிருஷ்ணகிரி, ஈரோடு, ராணிப்பேட்டை , திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது வரும் 10ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.






