--- --:--:-- --

எந்தப் பொய்களாலும் என்னை சிதைக்க முடியாது : நடிகை சமந்தா

11

விவாகரத்து என்பது வலி மிகுந்த செயல் எனவும் அதில் இருந்து மீண்டு வர தன்னை தனிமையிலிருக்க அனுமதிக்க வேண்டும் எனவும் நடிகை சமந்தா கேட்டுக் கொண்டுள்ளார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் சமந்தாவின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

 

அதன் பிறகு அவர்களது திருமண முறிவுக்கு இதுதான் காரணம் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தனக்கு இன்னொரு காதல் இருப்பததாகவும் குழந்தை வேண்டாம் என மறுத்ததாகவும் பல்வேறு பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

 

ஆனால் அப்படியான எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ள சமந்தா திருமண முறிவு எனும் வலி மிகுந்த நேரத்தில் தன்னை அதிலிருந்து மீண்டுவர அனுமதிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon