--- --:--:-- --

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை விஷ ஊசி போட்டு கொலை செய்த தந்தை..!

1

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்று விட்டதாக தந்தையும், உறவினரையும் பிடித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

 

கொங்கணாபுரம் கட்ச் பள்ளியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பெரியசாமியின் 14 வயதுமகன் வண்ணத்தமிழ். ஓராண்டுக்கு முன்பு வண்ணத்தமிழின் வலது காலில் புற்று நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

 

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை நடந்து வந்த போதிலும் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இல்லை என கூறப்படுகிறது. நடக்க முடியாததால் சிறுவன் படுத்து இருந்துள்ளான்.

 

மேலும் உடல் முழுவதும் புண்ணாகி சீழ் கட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் படும் துயரத்தை காணமுடியாமல் இருந்துள்ளார். இதனால் தந்தை உறவினர் மூலம் விஷ ஊசி போட்டு சிறுவன் வண்ணதமிழ் கொல்லப்பட்டதாக ஊர் முழுவதும் தகவல்கள் பரவின.

 

காவலர்கள் பெரியசாமியும் பிரபுவையும் பிடித்து சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon