--- --:--:-- --

உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் மதுக்கடைகள் மூடல்..!

6

உள்ளாட்சி தேர்தல் நடக்கும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று முதல் வரும் ஒன்பதாம் தேதி வரை மதுபான கடைகள் மூடப்படுகின்றன. இதனால் காஞ்சிபுரத்தில் பெரும்பாலான கடைகளில் நேற்று பெட்டி பெட்டியாக மது வாங்கி சென்றுள்ளனர்.

 

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் நேரத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ய கடை ஊழியர் உதவியதுடன் கூடுதல் மது விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து தகவலில் 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

உள்ளாட்சி தேர்தல்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon