பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் காங்.தலைவர் தகவல்..!
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்திக்க பிரியங்கா காந்தி சென்று கொண்டிருந்த பொழுது பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டிருப்பதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிபி ஸ்ரீனிவாசன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
இந்த நிலையில் அவரை கிராமத்துக்கு உள்ளே அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்திருப்பதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.






