--- --:--:-- --

காதலி பேசாததால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!

2

புதுச்சேரி அருகே காதலி பேசாமல் இருந்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து காதலியின் புகைப்படத்தை ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரியை சேர்ந்த யுவராஜ் என்பவர் முதலியார் பேட்டையை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

 

இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக் கொடி காட்டவே திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த மாதம் இவருக்கு விபத்து ஏற்பட்ட நிலையில் அவரது காதலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காதலி பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

 

கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்த யுவராஜ் கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இந்த நிலையில் யுவராஜ் நண்பர்கள் ஒன்று சேர்ந்து காதலித்து ஏமாற்றப்பட்டதாக கூறி அந்தப் பெண்ணின் புகைப்படத்தையும் தாயார் புகைப்படத்தையும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

 

திருமணம் செய்வதாக ஏமாற்றி இளைஞரை தூக்கில் தொங்கவிட்ட குடும்ப குத்து விளக்குகள் என குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon