ஸ்பைடர்மேன் போல சுவரில் ஏறும் சிறுமியின் வீடியோ வைரல்..!
திரைப்படத்தில் வரும் ஸ்பைடர்மேன் போல சுவரில் ஏறும் சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுமி தன்னுடைய வீட்டில் உள்ள ஒரு அறையின் மூலையில் சுவரில் கால்வைத்து முன்னோக்கி ஏறுகிறார்.
எந்த உதவியும் இல்லாமல் சுவரில் கைகளை வைத்து மரம் ஏறுவதைப் போல சுவரில் ஏறுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி வீட்டின் கூரையை தொட்டுவிட்டு அங்கேயே சில நொடிகள் இருக்கிறார். கீழே இறங்கி வரும் சிறுமி தரையை நெருங்கியதும் குதித்து விடுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





