அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபை கூட்டங்களை நடத்த அனுமதி..!
தமிழ்நாட்டில் அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபை கூட்டங்களை நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமங்களில் வளர்ச்சி பணிகள் குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறியும் வகையில் ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம் மற்றும் காந்தி பிறந்த நாள் ஆகிய நான்கு நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொது முடக்கம் காரணமாக கடந்த ஆண்டு கிராமசபை கூட்டங்கள் நடத்தப் படவில்லை. தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபை கூட்டங்களை நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கிராமசபை கூட்டங்களை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.






