--- --:--:-- --

ரேஷன் கடைகளில் பொது மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை..!

4

ரேஷன் கடைகளில் பொது மக்களை அலைக்கழித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

இதில் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முதியோர் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் ஒப்புதல் பெற்று வரும் நபரிடம் பொருட்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான அங்கீகாரம் வடிவம் நியாய விலை கடை களிலும் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாய விலை கடைகளில் பொருட்களை பெறுவதற்காக மக்களை அலைக்கழிக்கக்கூடாது என்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

அறிவுறுத்தலை மீறி பொதுமக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கார்டில் உள்ள ஐந்து வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கைரேகையை பதிவு செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon