பிரபல சாமியார் மகேந்திரகிரி தற்கொலை ..! 3 சீடர்கள் கைது..!

த்திரபிரதேசத்தில் பிரபல சாமியார் மகேந்திரகிரி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரின் சீடர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பரிஷத் என்ற அமைப்பின் தலைவராக இருந்தவர் திடீரென தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார்.

 

விசாரணையில் அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவை எடுத்தது தெரியவந்தது. மேலும் அவர் எழுதிய கடிதத்தில் தன்னுடைய சீடராக இருந்த ஆனந்தகிரி உள்ளிட்ட 3 பேரின் பெயர்களை எழுதி வைத்துள்ளார்.

 

இதன்பேரில் ஆனந்தகிரி உள்ளிட்டவர்களை கைது செய்தனர். பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply