கர்ப்பிணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சாலை மறியல்..!

ர்மபுரி அருகே கர்ப்பிணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .உயிரிழந்த வனிதாவுக்கு மாணிக்கவாசகம் என்பவருடன் திருமணம் நடந்து 7 மாதங்களே ஆகின்றன.

 

வேலைக்கு செல்லாமல் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தியதாக கூறப்படும் மாணிக்கவாசகம் பெற்றோர் வீட்டிற்கு வந்து மாமியாரையும் தாக்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் குளியல் அறையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

 

உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற பொழுது வழியில் நிறுத்தி மது அருந்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது பெண்ணின் உறவினர்கள் தாக்குதல் நடத்தினார். வனிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆம்புலன்ஸ் முற்றுகையிடப்பட்டது.

 

காவலர்கள் சமாதானப்படுத்திய பின் கலைந்து சென்றவர்கள் மீண்டும் தர்மபுரி அரசு மருத்துவமனை முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர்.


Leave a Reply