ஹேர் டிரான்ஸ்பிளன்டேசன் செய்த இளைஞர் 3 நாட்களில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்..!

குஜராத்தில் ஹேர் டிரான்ஸ்பிளன்டேசன் சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் ஒருவர் மூன்றாவது நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள காடேஷன் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் சவுத்ரி.

 

31 வயதான இவர் அந்த பகுதியில் நூலகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இளம் வயதிலேயே தலை வழுக்கையாக இருந்தால் கடந்த 15ஆம் தேதி மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஹேர் டிரான்ஸ்பிளன்டேசன் சிகிச்சை செய்யப்பட்டது.

 

இதையடுத்து கிளினிக்கில் இருந்து சில மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பிறகு வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அரவிந்துக்கு கடந்த 17ஆம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஹேர் டிரான்ஸ்பிளன்டேசன் செய்த மருத்துவமனைக்கு சென்றார்.

 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை கிளினிகல் தங்கி சிகிச்சை பெறும் படி அறிவுறுத்தியுள்ளனர். அதன் படி அனுமதிக்கப்பட்ட அரவிந்தின் உடல்நிலை சில மணி நேரத்தில் மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 18ஆம் தேதி காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என அவரது குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


Leave a Reply