மனிதர்களை தாங்கிச் செல்லும் ட்ரோன் கண்டுபிடிப்பு..!

டிரோன்கள் மூலம் பொருள்களை வினியோகிக்கும் முயற்சிகள் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டம் குறித்து கம்போடியாவை சேர்ந்த மாணவர்கள் மனிதனை சுமந்து செல்லும் டிரோனை வடிவமைத்துள்ளனர்.

 

60 கிலோ எடை உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையிலான டிரோனை உருவாக்க இந்திய மதிப்பில் 14 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் அதிக அளவிலான டிரோனை உருவாக்கும்போது உற்பத்தி செலவு குறையும் என கூறியுள்ளனர்.

 

தீயணைப்பு உள்ளிட்ட முக்கிய பணிகளில் இந்த வகை டிரோன்கள் பெருமளவில் உதவிபுரியும் எனவும் தெரிவித்துள்ளனர். சில மாதங்களில் முழுமையாக பரிசோதனை நிறைவடையும் எனவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Leave a Reply