கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு ..!

ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு நடந்துள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

 

வெப்பசலனம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில் இன்று காலை மூன்று மணி நேரம் ராமேஸ்வரம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வானம் கருமையாக காணப்பட்டதுடன் கடல் நீரை மேகம் வேகமாக உறிஞ்சும் காட்சியை அந்த பகுதி மீனவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.


Leave a Reply