திருமணம் செய்து வைக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட நபர்..!
தர்மபுரி அருகே திருமணம் செய்து வைக்கக்கோரி போதை ஆசாமி சாலையின் நடுவே தர்ணாவில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 33 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் போதையில் தரையில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்பொழுது அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவர் சாலையின் நடுவில் போராட்டம் நடத்தியவரை அங்கிருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.






