ஓ மை கடவுளே படத்தின் கன்னட ரீமேக்கில் பிரபுதேவா நடிக்கிறார்..!
ஓ மை கடவுளே படத்தின் கன்னட ரீமேக்கில் நடன இயக்குனரான பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வாணிபோஜன், அசோக் செல்வன், விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த ஓ மை கடவுளே பலர் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் விஜய் சேதுபதி கடவுள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.
அறிமுக இயக்குனரான பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் மை கடவுளே படத்தை கன்னட ரீமேக்கில் இயக்குகிறார். இந்த படத்தில் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு 90 விழுக்காடு முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





