பூஜையின் போது நீரில் மூழ்கி 5 சிறுமிகள் உட்பட 8 பேர் பலி..!
ஜார்கண்டில் கருமா பூஜையின் போது நீரில் மூழ்கி 5 சிறுமிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். ஜார்கண்டில் லத்தேரி மாவட்டம் திக்ரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கி அவர்கள் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.






