ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு..!

ர்நாடக மாநிலத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்து இரண்டரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. சிறுவன் சரத் திடீரென காணாமல் போயுள்ளார்.

 

குழந்தை காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் விழுந்து இருந்தது தெரியவந்தது.

 

பின்னர் இதுபற்றி ஆறு போலீசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

 

தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடிய நிலையில் 24 மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர், உணவு கிடைக்காததால் குழந்தை சரத் இறந்துவிட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்ட நிலையில் தண்ணீர் வராததால் கைவிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ஆள்துளை கிணற்றை தோண்டியது யார் என காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.


Leave a Reply