--- --:--:-- --

நீட் தேர்வு எழுதிய இளம்பெண் மாயம்..!

10

ரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதிய இளம்பெண் மாயமாகியுள்ளார். சின்ன அறியா கவுண்டம்பட்டியை சேர்ந்த செந்தில் பாண்டியன் , தங்கம் தம்பதியின் மகள் ஸ்வேதா கடந்த வாரம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதியுள்ளார்.

 

நேற்று நீட் தேர்வு விடைத்தாள் வெளியான நிலையில் இன்று மாலை வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து மாணவி ஸ்வேதாவை தேடி வருகின்றனர். நீட் தேர்வு அச்சத்தால் மாணவி மாயமாகியுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon