கொரொனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தியவர்களுக்கு தளர்வுகள்..!
கொரொனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்திய இந்தியர்களுக்கான பயண தடையில் இங்கிலாந்து தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரொனா பாதிப்புகளை முன்னிட்டு அறிவித்திருந்த சர்வதேச பயண விதிமுறைகளில் இங்கிலாந்து அரசு புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.
இதன் மூலம் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்களுக்கான பயணத் தடையில் இங்கிலாந்து தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதன்படி வருகிற அக்டோபர் 4ஆம் தேதி முதல் முழு அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்திற்கு வரும்பொழுது ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டாமென கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளை சிவப்பு, பொன்னிறம் மற்றும் பச்சை என பல வண்ணங்களில் இங்கிலாந்து வைத்திருந்தது. இவற்றில் இந்தியா பொன்னிற பட்டியலில் இருந்தது.
சிவப்பு மற்றும் கொண்ட பட்டியலில் இருந்த நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்து செல்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.






