--- --:--:-- --

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!

9

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 10ஆம் தேதி ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென மாயமாகி உள்ளார்.

 

இதனிடையே சிறுமியை காண அது அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். விளையாடிக்கொண்டிருந்த ராஜு என்ற இளைஞர் மீது அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அப்பொழுது அவரைத் தேடிச் சென்றபோது அவரின் வீடும் பூட்டப்பட்டு இருக்கவே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

பின்னர் வீட்டின் கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்தபோது போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது. இந்த நிலையில் குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon