மும்பையில் சொகுசு பங்களா வாங்கியுள்ள தீபிகா படுகோனே..!
நடிகை தீபிகா படுகோனே மும்பையில் சொகுசு பங்களா ஒன்று வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின்னரும் இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்தி நடிகை தீபிகா படுகோன் மும்பையில் உள்ள அலிகார் பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளனர்.
இதன் மதிப்பு 22 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. கடற்கரை பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளதால் பல தொழிலதிபர்களும் திரை நட்சத்திரங்களும் இந்த பகுதியில் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர்.






