பழிக்கு பழி வாங்க எண்ணிய குடும்பத்தினர் வீட்டின் முன் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம்..!
அண்ணனை கொலை செய்த ரவுடியை தீர்த்துக்கட்ட தம்பி திட்டம் தீட்டிய நிலையில் அதையறிந்த இந்த ரவுடி வீட்டின் முன்பாக நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேகே நகரை சேர்ந்தவர் சுமன்.
ரவுடியான இவர் மீது விருகம்பாக்கம் கேகே நகர் மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. திடீரென வந்த 6 பேர் கொண்ட கும்பல் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்றது. இதில் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
போலீசார் நடத்திய விசாரணையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது தக்காளி பிரபா, கோழி பாபு என தெரியவந்தது. கடந்த 2018 இல் சுமனின் சகோதரரை தக்காளி பிரபாகரன் மற்றும் கோழி பாபுவின் கூட்டாளிகள் கொலை செய்தனர்.
அண்ணனை கொலை செய்தவரை தீர்த்து கட்ட எண்ணிய தம்பியின் திட்டத்தை அறிந்து கொண்ட அவர்கள் முன்கூட்டியே நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்றது தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





