தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…!
கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நிறைவடைந்திருக்கிறது. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மட்டும் இருபது மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் ஆக நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.
கடந்த 25 நாட்களாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.
இவ்வாறாக நடைபெற்று வந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நிறைவடைந்திருக்கிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






