--- --:--:-- --

ஆசிட் கொட்டியதில் மாணவ மாணவிகள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

2

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகத்தில் இருந்த ஆசிட் கொட்டியதில் மாணவ மாணவிகள் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

புதுச்சேரி அருகே உள்ள விழுப்புரம் மாவட்ட பகுதியில் அமைந்துள்ளது கண்டமங்கலம். அந்த பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

 

இன்று பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் இந்த பள்ளிகள் ஆய்வகம் ஒன்றில் நெடுஞ்சாலை விரிவாக்கம் காரணமாக இடிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்கு விடுமுறை என்பதால் இன்று அந்த ஆய்வகத்தில் உள்ள பொருட்களை அகற்ற வந்துள்ளனர்.

 

ஆய்வகத்தில் இருந்து ஆசிட் கொட்டியதில் 4 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon