நடிகை வித்யூலேகாவிற்கு நடந்த திருமணம்..!
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகை வித்யூலேகா தற்போது திருமணம் செய்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் வெளியான நீ தானே எந்தன் பொன் வசந்தம் படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமான வித்யூலேகா
கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் உடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த நிலையில் திடீரென்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்






