--- --:--:-- --

விநாயகர் வழிபாட்டுக்கு தடை ஏன் விதிக்கப்பட்டுள்ளது? – அண்ணாமலை கேள்வி

2

ண்டை மாநிலங்களில் விநாயகர் வழிபாட்டுக்கு தடை இல்லாத போது தமிழகத்தில் முழுமையாக தடை விதிக்க காரணம் என்னவென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடலூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் விநாயகர் சிலை செய்தவர் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

 

புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விநாயகர் வழிபாட்டுக்கு தடை இல்லாத போது தமிழகத்தில் கட்டுப்பாடு விதிக்காமல் முழுமையாக தடை விதிப்பது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார்.

 

தமிழக மக்களும் பாஜக தொண்டர்களும் முதலமைச்சர் மு க ஸ்டாலி னுக்கு அஞ்சலட்டையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் எழுதி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon