--- --:--:-- --

சூரியனில் ஏற்படும் காந்த புயலால் பூமியில் இணைய சேவை பாதிக்கப்படும்..!

6

சூரியனில் ஏற்படும் காந்த புயலால் பூமியில் இணைய சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

 

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் சங்கீதா என்பவர் இது குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் சூரியனில் இருந்து வெளியாகும் அதிக சக்திவாய்ந்த காந்தப்புயல் பூமியின் மின்காந்த அலைகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

 

அடுத்த 10 ஆண்டுகளில் சூரிய காந்த புயலின் அளவு ஒன்றரை விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடு வரை உயரும் என எச்சரித்துள்ளார். இதனால் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் போன்றவற்றில் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon