திருப்பூரில் தொழிலதிபரின் மகன் கடத்தப்பட்டதில் கடத்தல் கும்பல் கைது..!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் கடத்தப்பட்ட மகனை 3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட சம்பவத்தில் தற்போது 4 குற்றவாளிகளை திருப்பூர் மாவட்ட தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. காங்கேயம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் மூர்த்தி. இவர் அரசியல் மற்றும் திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றார்.
இவருடைய மகன் பட்டப்படிப்பை முடித்துவிட்டு இவர் தற்போது அரசு ஆலய நிர்வாகத்தை கவனித்து வருகிறார். நேற்று மாலை அவர் தனிப்பட்ட விஷயங்களுக்காக வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய போது ஏழு நபர்கள் கொண்ட கடத்தல் கும்பல் ஒன்று இவரை கடத்தி உள்ளது.
அந்த கும்பல் இவருடைய தந்தைக்கு போன் செய்து 3 கோடி கொடுத்தால் மகனை விட்டு விடுவோம் என்றும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கக் கூடாது என்றும் கடத்தல் கும்பல் தந்தையிடம் கூறியுள்ளது.
இந்த நிலையில் மூன்று கோடி ரூபாய் கொடுத்து அவர் தனது மகனை மீட்டு விட்டு போலீசாரிடம் புகாரை அளித்தார். தற்போது காவல்துறையினர் அந்த கும்பலை பிடித்துள்ளனர்.






