--- --:--:-- --

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண்ஜி காலமானார்..!

1

த்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண்ஜி காலமானார். அவருக்கு வயது 89. ரத்தத்தில் ஏற்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கல்யாண்சிங் கடந்த ஜூலை 4ஆம் தேதி லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

 

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் .இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உத்தரபிரதேச முதல்வராக இருந்தவர் கல்யாண்சிங் என்பது குறிப்பிடத்தக்கது. இராஜஸ்தான் இமாச்சலப் பிரதேச ஆளுநர் ஆகவும் அவர் இருந்துள்ளார்.

 

கல்யாண்சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon