--- --:--:-- --

மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை குஷ்பூ..!

13

90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்  நடிகை குஷ்பூ. இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். இந்நிலையில் இவர் தனது இணையத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

டிவி, சினிமா, அரசியல் என பிசியாக வலம் வரும் குஷ்பு, சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அண்மையில் தனது இளைய மகளான அனந்திதா பட்டம் வாங்கிய புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே தனது உடல் எடையை குறைக்க தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் குஷ்பு. தற்போது அவரின் முயற்சிக்கு பலனாக படு மாடலான லுக்கில் இன்றைய கதாநாயகிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ளார் குஷ்பு.

 

தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது. எப்போதும் சேலைகளில் வலம் வரும் குஷ்பு, மாடர்ன் உடையில் கடின உழைப்பின் மூலமாக கிடைக்கும் பிரதிபலனின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்ற கேப்சனோடு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon