--- --:--:-- --

பெற்றோரிடம் பத்திரமாக சேர்க்கப்பட்ட ஆப்கன் குழந்தை..!

5

காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கப்படை வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை பெற்றோரிடம் பத்திரமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கப்பல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கடுமையான கூட்ட நெரிசலுக்கு மத்தியில் காபூல் விமான நிலையத்தில் சுவருக்கு அப்பால் உள்ள அமெரிக்க வீரர்களுடன் குழந்தை ஒன்று ஒப்படைக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது.

 

அதை பார்த்த பொதுமக்கள் ஆப்கானிஸ்தானின் நிலவரத்தை உணர்ந்து அச்சமடைந்தனர். இந்த நிலையில் அந்தக் குழந்தை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமெரிக்க கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon