--- --:--:-- --

திருவாடானை அருகே இடி, மின்னல் தாக்கியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி

jfj

இராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று  இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வந்தது.

 

திணைக்காத்தான்வயல் அருகே சீந்திவயல் உள்ளிட்ட கிராம பகுதியிலும் தொடா்ந்து மழை பெய்தது. அப்போது  அந்தப் பகுதியில் வழிமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் மகாலிங்கம் என்பவர் செல்போன் பேசியக்கொண்டே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் சம்ப இடத்திலேயே மகாலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் ஆகியோர்  மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி ஆய்விற்காக திருவாடானை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் இதுகுறித்து திருவாடானை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.தகவலின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon