65 அடி ஆழ விழுந்த கார்..! தாத்தா பலி.. பேரனுக்கு படுகாயம்..!
பொள்ளாச்சி அருகே புதிதாக வாங்கிய காரில் பேரனை அழைத்துச் சென்று தாத்தா திறந்த வெளி கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள விவசாயி ஈஸ்வரன் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அதில் தன் பேரன் கிருஷ்ணாவை அழைத்து பொள்ளாச்சி செல்ல நினைத்துள்ளார். பின்னால் பள்ளம் இருப்பதை கவனிக்காமல் காரை பின்பக்கமாக இயக்கியதால் கார் 65 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் ஈஸ்வரனை பிணமாகவும், அவரது பேரனான கிருஷ்ணாவை படுகாயங்களுடன் மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





