நண்பனின் உடைகளை முழுமையாக கலைந்து பிறந்தநாள் கொண்டாட்டம்..!
தஞ்சையில் பொது இடத்தில் தனது நண்பனின் உடைகளை முழுமையாக கலைந்து அவருக்கு பிறந்த நாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பகுதிகளில் உள்ள அபார்ட்மென்டில் வெளியூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பலர் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த வகையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அந்த இடத்தில் சில மாணவர்கள் சேர்ந்து தனது நண்பனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதாக கூறப்படுகிறது.
அப்போது மாணவர்கள் நண்பனின் உடைகளை முழுமையாக களைந்து அந்த பகுதியை சுற்றி வலம்வர செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த அருவருக்கத்தக்க காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அந்தப் பகுதியில் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






