--- --:--:-- --

கேரளாவில் பெருந்தொற்றின் தாக்கம் உச்சம்..!

6

நாடு முழுவதும் கொரொனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் கேரளாவில் பெருந்தொற்றின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அந்த மாநிலத்தில் 11 ஆயிரத்து 500 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

ஒரே நாளில் 135 பேர் கொரொனா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 23ஆம் தேதி 13.63 ஆக இருந்த கொல்லுயிரியின் தாக்கம் தற்போது 10.59 விழுக்காடாக குறைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா சார்ஜ் தெரிவித்துள்ளார்.

 

தற்போது மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon