ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கலாம்..!
ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களை திறக்க மாநில அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதைப் போன்று அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் துவங்கும் அல்லது பத்து, பன்னிரண்டாம் வகுப்பு களுக்கு மட்டுமே வகுப்பறை பாடமா என்பது குறித்து அமைச்சர் எதுவும் தெரிவிக்கவில்லை.
குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கொரொனா தொற்று குறைந்தால் மட்டுமே பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. நேற்றிரவு அங்கு வெறும் 25 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியான நிலையில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.






