--- --:--:-- --

இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 மாத குழந்தை பத்திரமாக மீட்பு..!

1

சீனாவில் மழை வெள்ள பாதிப்பால் இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 மாத குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளது. சீனாவில் வரலாறு காணாத அளவிற்கு பெய்து வரும் மழையால் நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

 

வெள்ளத்தில் சிக்கி இருப்போரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது இடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

 

அப்போது இரண்டு நாட்களுக்கு மேலாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூன்று மாத குழந்தையை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மீன்கள் தேங்கிய மழை நீரில் நீந்திச் செல்கின்றன.

 

அந்த பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீரில் மீன்கள் நீந்தி சில காட்சிகள் வெளியாகியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon