--- --:--:-- --

தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் வெங்கடேஷ்..!

5

சுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் வெங்கடேஷ் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் தயாராகியுள்ளது.

 

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் மற்றும் ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் ஜூலை 20-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.

 

திரையரங்குகளில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் ஓ‌டி‌டியில் ரிலீஸ் ஆவதால் கடும் அதிருப்தியில் உள்ள தனது ரசிகர்களிடம் நடிகர் வெங்கடேஷ் மன்னிப்பு கோரியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon